rfxsignals May 13, 2020 No Comments

ரஜினிகாந்த் 2013ம் ஆண்டும், கமல்ஹாசன் 2016ம் ஆண்டும் டுவிட்டருக்குள் வந்தனர். ஆனால் அதன்பின் ரஜினிகாந்த் பதிவிட்டதை விட கமல்ஹாசன் பதிவிட்டது தான் அதிகமாக இருக்கும்.

ட்விட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என கமல்ஹாசன் மேல் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் தேர்தலிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளையும் பெற்றார்.

இந்நிலையில் டுவிட்டரில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ரஜினிகாந்தை விட அதிகமாகியுள்ளது. ரஜினிகாந்திற்கு 57 லட்சம் பாலோயர்களும், கமல்ஹாசனுக்கு 60 லட்சம் பாலோயர்களும் தற்போது டுவிட்டரில் உள்ளார்கள்.

 

 

கடந்த வாரம் தான் கமல்ஹாசன் 60 லட்சத்தைக் கடந்தார். நடிகராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன் அடிக்கடி டுவீட்டுகள் போட்டாலும், தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில் தனுஷ் தான் 90 லட்சம் பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.