சம்பளம் வாங்காமல் நடிக்கும் விஜய்சேதுபதி, சத்யராஜ்& பார்த்திபன் – கொரோனாவுக்குப் பின் புதிய திட்டம்!

சம்பளம் வாங்காமல் நடிக்கும் விஜய்சேதுபதி, சத்யராஜ்& பார்த்திபன் – கொரோனாவுக்குப் பின் புதிய திட்டம்!

 

 

கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சத்யராஜை வைத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட உள்ளது.

 

 

கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சத்யராஜை வைத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட உள்ளது.

கொரோனாவால் சினிமா துறை கடந்த 2 மாதங்களுக்கு மேல் முடங்கியுள்ளது. இதனால் வரும் காலங்களில் சினிமா தயாரிப்பு முறைகளில் பெரிய மாற்றம் வரும் என சொல்லப்படுகிறது. நடிகர்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்து தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்க தயாராக இல்லை. அது மட்டும் இல்லாமல் மக்கள் உடனடியாக திரையரங்குகளுக்கு வருவார்களா என்றும் தெரியவில்லை. இதனால் குறைந்த முதலீட்டிலேயே படத்தைத் தயாரிக்க விரும்புகின்றனர். அதன் ஒரு கட்டமாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமன்யம் மற்றும் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி ஆகியோர் கூட்டணியில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.

 

இந்தப் படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ். கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பங்கேற்கும் தொழிலாளர்கள் தவிர மற்ற கலைஞர்கள் யாருக்கும் சம்பளம் என்று முன்பணம் கிடையாது. முதலில் போட்ட பட்ஜெட்டில் படத்தை முடித்துவிட்டு ரிலீஸுக்கு பின் வரும் பணத்தில் அவரவரின் சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு  ஒரு தொகை அளிக்கப்படும்.

மேலும் படத்தின் பட்ஜெட்டான 2 கோடியையும் 200 பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்ய உள்ளனராம். அதன் மூலம் ஒருவர் அதிகபட்சமாக 10 பங்குகளை வாங்கிக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

கள்ளக் காதலாக உருவாகும் விண்ணைத்தாண்டி வருவாயா 2.. கௌதம் மேனனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேலயே கண்ணு

 

கள்ளக் காதலாக உருவாகும் விண்ணைத்தாண்டி வருவாயா 2.. கௌதம் மேனனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேலயே கண்ணு

கடந்த 2010ஆம் ஆண்டு சிம்பு த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இதுதான் சிறந்த காதல் படம் என அனைவரையும் கொண்டாட வைத்தனர்.

ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான ஒவ்வொரு பாடலும் ஒரு காவியமாக அமைந்தது. இந்நிலையில் சரியாக பத்து வருடங்கள் கழித்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை கவுதம் மேனன் வெளியிட்டு இருந்தார்.

சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை இந்த குறும்படம் பெற்றாலும் சமூக வலைதளங்களில் பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளான குறும் படமாக உருவாகியுள்ளது இந்த கார்த்திக் டயல் செய்த எண். பெரும்பாலும் கௌதம் மேனன் படங்களில் ஏற்கனவே திருமணமாகி பெண்கள் மீது காதல் வருவதைப் போலவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த குறும்படத்தில் சிம்பு திருமணமாகி இரண்டு குழந்தை இருக்கும் திரிஷாவிடம், எனக்கு நீ வேண்டும் என்று இருப்பதைப் போல படமாக்கப்பட்டிருந்தது. அதை வைத்து கள்ள காதல் கதை என கேலி செய்து தற்போது சமூக வலைதளங்களில் டைம் பாஸ் செய்து வருகிறார்கள் நம்ம நெட்டிசன்கள்.

இதனால் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என நினைத்த நெட்டிசன்கள் அந்த படம் எடுக்கவே வேண்டாம் எனும் அளவுக்கு வச்சு ஓட்டி வருகின்றனர். அதில் சில மீம்ஸ் கலெக்ஷனை பார்ப்போம்:

 

meme-01

 

meme-02

 

meme-03

ராணுவ அதிகாரியாக நடிக்கும் சூர்யா!

ராணுவ அதிகாரியாக நடிக்கும் சூர்யா!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

2டி எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறார். பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதை, இது. படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்க இருக்கிறது.

சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படம் சூர்யாவின் 38-வது படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விவேக் பாடல்களை எழுதுகிறார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியரை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

 

 

 

திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் பின்னர் ஒவ்வொருவராக குணமடைந்து, தற்போது 114 பேரும் குணமடைந்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் இருந்து வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய பங்காற்றி வருகிறது. அதற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனின் நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் கலெக்டர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குடைபிடிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட மக்களுக்கு சவால்களை விடுத்தார். இதுபோல் சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்-அப், டுவிட்டர் போன்றவற்றில் விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். இது பலரையும் கவர்ந்து வருகிறது.

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் கலெக்டர் விஜயகார்த்திகேயனை, நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அதன்படி கலெக்டர் தனது டுவிட்டர் பதிவில் திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா நிலவரம் குறித்து பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், இது போன்று தொடர்ந்து பணியாற்றுங்கள். நாம் ஒவ்வொருவரும் இது போன்று பணியாற்ற வேண்டும். நீங்கள் இதற்கு தகுதியானவர். பாராட்டுக்குறியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் டுவிட்டரில் அளித்த பதிலில், நன்றி சகோதரர். கொரோனா தடுப்பு பணியில் ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது!, ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்! ஜெயிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிலில் உள்ள வசனம் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு படத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸுக்கு தயாரான விஜய் சேதுபதியின் ‘இடம் பொருள் ஏவல்’!

ரிலீஸுக்கு தயாரான விஜய் சேதுபதியின் ‘இடம் பொருள் ஏவல்’!

 

 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்த ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த உடனேயே படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த செய்தி விஜய் சேதுபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தலைவன் இருக்கின்றான் படத்தில் அந்த நெருக்கமான நடிகையும் இருக்காராமே? இணையத்தை சூடாக்கும் தேவர்மகன் 2

தலைவன் இருக்கின்றான் படத்தில் அந்த நெருக்கமான நடிகையும் இருக்காராமே? இணையத்தை சூடாக்கும் தேவர்மகன் 2

 

 

தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு நெருக்கமான நடிகையும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படம் தலைவன் இருக்கின்றான். தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சுபாஷ்கரனின் லைக்கா புரடெக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

 

விஜய் சேதுபதி ரோல்

 

விஜய் சேதுபதி ரோல்

தலைவன் இருக்கின்றான் படம் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் வைகைப்புயல் வடிவேல் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, நாசருக்கு மகனாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் தீயாய் பரவியது.

 

 

நடிகைகள்?

 

நடிகைகள்? தேவர் மகன் படத்தில் நாசர் வில்லனாக நடித்திருந்தார். அவருக்கு மகனாக விஜய் சேதுபதியுடன் தலைவன் இருக்கின்றான் படம் தொடரும் என தகவல் வெளியானது. இந்நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகைகள் பூஜா குமாரும் ஆண்ட்ரியாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

கமலுடன் நெருக்கம்

 

கமலுடன் நெருக்கம் பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும் ஏற்கனவே கமலுடன் விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். பூஜா குமார் கவுதமிக்கு பிறகு நடிகர் கமலுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். கமலும் குடும்ப விழாக்களில் கூட பூஜா குமாரை மிஸ் பண்ணாமல் சேர்த்துக் கொள்கிறார்.

கமலுடன் நெருக்கம்

பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும் ஏற்கனவே கமலுடன் விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். பூஜா குமார் கவுதமிக்கு பிறகு நடிகர் கமலுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். கமலும் குடும்ப விழாக்களில் கூட பூஜா குமாரை மிஸ் பண்ணாமல் சேர்த்துக் கொள்கிறார்.

அவரும் உண்டாம்

 

அவரும் உண்டாம்

இதனாலேயே இருவர் குறித்தும் ஏராளமான கிசுகிசுக்கள் வைரலானது. இந்நிலையில் நடிகை பூஜா குமார் தலைவன் இருக்கின்றான் படத்தில் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் நடிகை ரேவதியும் தேவர்மகன் படத்தில் செய்த ரோலையே செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு

 

விரைவில் அறிவிப்பு படத்தில் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவர்மகன் படத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கவுதமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிவாஜி கணேசனுக்கு மகனாக சக்திவேல் கதாப்பாத்திரத்தில் நடித்த கமல், அப்பாவான சிவாஜியான மறைவுக்கு பிறகு கிராம மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் தலைவராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

நடிகர் ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

 

நடிகர் ராணா டகுபதி புதன்கிழமை தனது காதலி மிஹீகா பஜாஜுடன் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நிச்சயதார்த்த விழாவின் படங்களுடன் தம்பதியினர் அந்தந்த இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சடங்குகள் மரபுகளின்படி நடந்தன. ராணா ஒரு வெள்ளை சட்டை மற்றும் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார், அதே நேரத்தில் அவரது காதலி ஒரு ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிற புடவையில் அழகாக காணப்பட்டார்.

 

 

நடிகர் ராணா டகுபதி புதன்கிழமை தனது காதலி மிஹீகா பஜாஜுடன் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நிச்சயதார்த்த விழாவின் படங்களுடன் தம்பதியினர் அந்தந்த இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சடங்குகள் மரபுகளின்படி நடந்தன. ராணா ஒரு வெள்ளை சட்டை மற்றும் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார், அதே நேரத்தில் அவரது காதலி ஒரு ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிற புடவையில் அழகாக காணப்பட்டார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராணா டகுபதி. இவர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர். நடிகை த்ரிஷாவை காதலித்து வந்த இவர் பின்னர் இவர்களுக்கு இடையே காதல் முறிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பெண் தொழில் அதிபர் ஒருவர் தன் காதலை ஏற்றுக் கொண்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது இவர்களுக்கு சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

 

 

சூர்யா ரசிகர்களுக்கு கிடைத்த கடும் அதிர்ச்சி

சூர்யா ரசிகர்களுக்கு கிடைத்த கடும் அதிர்ச்சி

 

BREAKING: Surya's Aruva Massive Update | Hari | inbox - YouTube

 

சூர்யா தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் சூரரைப் போற்று படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை கொரொனா பிரச்சனை முடிந்து திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.

ஆனால், இப்படத்தை OTTயில் பெரிய தொகை கொடுத்து விற்க படக்குழு முடிவு செய்துள்ளதாக ஒரு சில செய்திகள் கசிந்துள்ளது.

இது சூர்யா ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இது அதிகாரப்பூர்வம் இல்லை.

அஜித்தின் அந்த படம் படுதோல்வியடைய இயக்குனர் தான் காரணம், கொந்தளித்த தயாரிப்பாளர்!

அஜித்தின் அந்த படம் படுதோல்வியடைய இயக்குனர் தான் காரணம், கொந்தளித்த தயாரிப்பாளர்!

 

Ajith Kumar Rides 'Valimai' Bike from Hyderabad to Chennai?

 

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் இரண்டு விதமான கெட்டப்பில் நடித்து வருகின்றார் என செய்திகள் கிடைத்துள்ளது.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும், தயாரிப்பாளர் ராஜன், கௌதம் மேனன் செய்த சதியால் தான் என்னை அறிந்தால் படம் படுதோல்வி அடைந்தது.

அதை புரிந்துக்கொண்டு தான் அஜித் உடனே ரத்னத்திற்கு வேதாளம் படத்தை கொடுத்தார் என கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட ரைசா

மன்னிப்பு கேட்ட ரைசா

 

Border Collie

 

இன்ஸ்டாகிராமத்தில் (இன்ஸ்டாகிராம்) சொந்தமாக வீடு கட்டி குடியேறிவிட்ட சினிமா பிரபலங்களை, தங்கள் ஏரியாவுக்கு அழைத்து வர டுவிட்டர், பேஸ்புக், ஹலோ உள்ளிட்ட மற்ற சமூகவலைதளங்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் போல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, பிரபலங்களை ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாட வைக்கும் வேலையை டுவிட்டர் செய்து வருகிறது.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் செட்டிலாகிவிட்ட நடிகை ரைசா வில்லசனை, #AskRaiza எனும் ஹேஷ்டேகில் ரசிகர்களுடன் பேச வைத்தது டுவிட்டர். அப்போது ரசிகர் ஒருவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரைசா பங்கேற்ற போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இந்த காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதா? பிக் பாஸ் கூடவே சண்டை போட்ட தைரியமான பெண்ணாச்சே நீங்கள் என குறிப்பிட்டிருந்தார்.