rfxsignals July 29, 2020 No Comments
தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை
தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மராட்டியத்திற்கு அடுத்த படியாக தமிழகம் 2-ஆம் இடம் வகிக்கிறது.

தலைநகர் சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. எனினும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  6,426  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,34,114 –  ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.   சென்னையில் இன்று ஒருநாளில் 1,117-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் 5,927 பேர் குணம் அடைந்துள்ளனர்.