rfxsignals May 22, 2020 No Comments

சம்பளம் வாங்காமல் நடிக்கும் விஜய்சேதுபதி, சத்யராஜ்& பார்த்திபன் – கொரோனாவுக்குப் பின் புதிய திட்டம்!

 

 

கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சத்யராஜை வைத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட உள்ளது.

 

 

கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சத்யராஜை வைத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட உள்ளது.

கொரோனாவால் சினிமா துறை கடந்த 2 மாதங்களுக்கு மேல் முடங்கியுள்ளது. இதனால் வரும் காலங்களில் சினிமா தயாரிப்பு முறைகளில் பெரிய மாற்றம் வரும் என சொல்லப்படுகிறது. நடிகர்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்து தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்க தயாராக இல்லை. அது மட்டும் இல்லாமல் மக்கள் உடனடியாக திரையரங்குகளுக்கு வருவார்களா என்றும் தெரியவில்லை. இதனால் குறைந்த முதலீட்டிலேயே படத்தைத் தயாரிக்க விரும்புகின்றனர். அதன் ஒரு கட்டமாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமன்யம் மற்றும் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி ஆகியோர் கூட்டணியில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.

 

இந்தப் படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ். கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பங்கேற்கும் தொழிலாளர்கள் தவிர மற்ற கலைஞர்கள் யாருக்கும் சம்பளம் என்று முன்பணம் கிடையாது. முதலில் போட்ட பட்ஜெட்டில் படத்தை முடித்துவிட்டு ரிலீஸுக்கு பின் வரும் பணத்தில் அவரவரின் சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு  ஒரு தொகை அளிக்கப்படும்.

மேலும் படத்தின் பட்ஜெட்டான 2 கோடியையும் 200 பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்ய உள்ளனராம். அதன் மூலம் ஒருவர் அதிகபட்சமாக 10 பங்குகளை வாங்கிக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.