rfxsignals May 16, 2020 No Comments

சிம்புவின் மனைவிக்காகக் காத்திருக்கும் நடிகை..

 

நடிகர் சிம்பு இணைய தளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார் அதில் குடும்பத்தினருக்காக லாக்கடவுனில் சமையல் செய்வதாக குறிப்பிட்டிருந்ததுடன், மசாலா சிக்கன் சமையல் செய்தார்.அப்போது, ‘தனக்கு வரப் போகும் மனைவியை நன்றாகப் பார்த்துக்கொள்வேன். அவர் சமைத்துப் போடுவதற்காக வரவில்லை. பிடித்தால் சமைப்பார், இல்லா விட்டால் சமைக்க மாட்டார். மற்றவர்களைப்போல் அவரை எதற்காகவும் நான் கஷ்டப்படுத்த மாட்டேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

 

சிம்புவின் இந்த பரந்த மனப்பான்மையைப் பலரும் பாராட்டி இருந்தனர்.
நடிகை பிந்து மாதவி தனிப்பட்ட முறையில் சிம்புவை பாராட்டி இருக்கிறார். அவர் கூறும்போது, ‘மனைவியைக் கஷ்டப்படுத்த மாட்டேன் என்ற உங்கள் நல்ல எண்ணத்தை பாராட்டுகிறேன். உங்கள் மனைவியை விரைவில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.