rfxsignals May 14, 2020 No Comments

மூன்று மடங்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறிய OTT.. அப்படியே கிளம்ப சொன்ன தளபதி விஜய்

Income Tax Department recovers Rs 65 crore from Tamil actor ...

 

ஓவர் தி டாப் மீடியா சர்வீஸ் (ஓ.டி.டி) கண்டு மிரண்டு போய் உள்ளது தமிழ் சினிமா. அதற்கு பல காரணங்கள் உண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஓ.டி.டி-யில் ஒளிபரப்பப்பட்டால் தமிழ் சினிமா அழிந்துவிடும் என்பதுதான்.

தற்போது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓ.டி.டி-யில் வெளியிடப்போவதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தநிலையில் வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

இப்படி ஹிட் கொடுக்கக்கூடிய படங்கள் ஓ.டி.டி பிளாட்பார்மில் வெளியிட்டால் நாளை தியேட்டர்களை இழுத்து மூடும் அபாயம் ஏற்படும், தொழிலாளர்கள் வேலை இழப்பு, சினிமா துறையில் இருக்கும் ஊழியர்கள் வேலை இழப்பு, நடிகர்களின் சம்பளம் கோடிகளில் பெற முடியாது இது போன்ற பல பிரச்சனைகள் உள்ளன.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தை மூன்று மடங்கு அதிகமாக லாபம் தருவதாக கூறி பேரம் பேசப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் வேண்டாம் என்று கூறியதற்கு பல காரணங்கள் உள்ளது.

முக்கியமான ஒரு சில காரணங்களை தற்போது பார்க்கலாம்; முதல் காரணமாக பார்த்தால் ரசிகர்கள் பால் அபிஷேகம் பண்றது, அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என்பதுதான், முக்கியமான இரண்டாவது காரணம் வினியோகஸ்தர்களிடமிருந்து தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சில கோடிகளை வங்கியுள்ளனர்.

இதனால் அவர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை நொறுங்கிவிடும், மூன்றாவது இதுபோன்று ஓ.டி.டி-யில் வெளியிட்டால் நாளை அரசியலுக்கு வரும் நடிகர்கள் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். இப்படி சினிமா துறையினர் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகின்றன.

இப்போது ஓ.டி.டி நிறுவனங்கள் எதற்கு இதனை முன்னிறுத்தி முயற்சி செய்கிறது என்பதை பார்க்கலாம், அதாவது தற்போது உள்ள சூழ்நிலையை கையில் எடுத்துக்கொண்டு ஓ.டி.டி நிறுவனங்கள் தயாரிப்பைவிட மூன்று மடங்கு பணம் கொடுப்பதாக மாஸ்டர் படத்திற்கு கேட்டார்களாம். ஒரு தடவை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்து விட்டாலே அனைத்தும் முடிந்துவிட்டது.
ஏனென்றால் அடுத்தடுத்து இருக்கும் தல அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா போன்றவர்களின் படமும் இதே நிலை ஏற்படும் என்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் தளபதி விஜய்யை டார்கெட் செய்துள்ளது.
தியேட்டரில் ரிலீஸ் பண்ணால் மூன்று மடங்கு லாபம் வருமா என்பது கேள்விக்குறிதான் ஆனாலும் இவர்கள் இவ்வளவு முயற்சி செய்வதற்கு தமிழ் சினிமாவை அழிப்பதற்கான அடித்தளம் தான் என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது.
மாஸ்டர் படத்தைப் பொருத்தவரை தயாரிப்பாளர் மற்றும் தளபதி விஜய் எந்த ஒரு சூழ்நிலையிலும் திரைப்படம் ஓ.டி.டி பிளாட்பார்மில் வராது தியேட்டரில் மட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக மட்டும் வெளியிடுகிறோம் என்று கூறிவிட்டனர்.

இதனால் தமிழ் சினிமா காப்பாற்ற பட்டுள்ளதாகவும், தளபதியின் அரசியல் கனவு காப்பாற்ற பட்டதாகவும் சினிமா துறையினர் இணையதளத்தில் விவாதப் பொருளாக எடுத்துள்ளனர். எது எப்படியோ தளபதி படம் தியேட்டரில் பார்த்தால் மட்டுமே மரண மாஸ் ஆக இருக்கும்.