தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை உணர்ந்த விஜய் ஆண்டனி!!!
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் இருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரத்தை வெளுத்து வாங்குவார். முதல் படத்திலேயே தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றவர்.
ஊரடங்கால் தற்போது திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எடுத்த திரைப்படங்களை வெளியிட முடியவில்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு களையும் நடத்தி முடிக்க முடியவில்லை. இதனால் பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளாகி உள்ளார்கள் தயாரிப்பாளர்கள்.
இதை கருத்தில் கொண்டு நடிகை விஜய் ஆண்டனி தற்போது தான் நடித்துவரும் மூன்று படங்களின் சம்பளத்தில் இருந்து சுமார் 25 சதவீதம் குறைத்து இருக்கிறாராம். ஒவ்வொரு படத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் குறைத்தாக தெரிகிறது. நடிகர்கள் பல்வேறு விதங்களில் உதவிகளை செய்து வந்தாலும் இவரது இந்த முயற்சி பெரும் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. நடிகை ராதிகா இவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் .
ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் போக்க நடிகர்கள் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது