rfxsignals May 8, 2020 No Comments

சம்பளம் ஒரு கோடியை நெருங்கிய ராஷ்மிகா மந்தனா!

 

சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தெலுங்கில் அடுத்தடுத்து ‘சரிலேறு நீக்கெவரு, பீஷ்மா’ என இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

 

அந்தப் படங்களுக்கு 1 கோடிக்கும் குறைவான சம்பளம் பெற்றிருந்த நிலையில், எப்படியும் தனது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் காத்திருந்தார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா’ படத்தில் நடிப்பதற்காக சம்பளமாக ஒரு கோடியை நெருங்கினார்.

தற்போது, 1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் தரத் தயாராக உள்ளவர்களின் படங்களில் நடிப்பது என்றும் ம முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.