தன் காதலியை பகிரங்கமாக வெளிப்படுத்திய பிரபல நடிகர்
‘பாகுபலி’ படத்தில் நடித்த பிறகு ராணா டகுபட்டி இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகரக மாறினார்.
சமீபத்தில் த்ரிஷாவின் பிறந்தநாளுக்குக் கூட வாழ்த்து தெரிவித்திருந்த ராணா அப்போது த்ரிஷாவை ‘பழைய தோழி’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அது ஏன் என்று தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.
நேற்று (மே 12) தன்னுடைய காதலியை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் ராணா. காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து ”அவள் சம்மதம் சொல்லிவிட்டாள்,” எனப் பதிவிட்டிருக்கிறார்.
ராணாவுக்கு பலரும் வாழ்த்துகளைச் சொல்லி வருகிறார்கள்.