மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்.. வெறித்தனமாக நடக்கும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்…
மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் மூலம் முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார்
இந்த இயக்குநரின் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதினால் விஜய்யின் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இதடையே, மாஸ்டர் படம் பற்றி மற்றும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தீபாவளிக்கு மாஸ்டர் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் போஸ்ட் புரொக்ஷன் வேலை நடைபெற்று வருவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின எனக் கூறியுள்ளார்.
ஆனால் படம் வெளியீடு தொடர்பாக எந்தத் தகவலையும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. மீண்டு படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதால் விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.