rfxsignals May 16, 2020 No Comments

தளபதி விஜயை பார்த்து பொறாமைப்பட்ட தல அஜித்.. ‘சுச்சி லீக்ஸ்’ சுசித்ரா போட்ட புது குண்டு!

 

நடிகர் விஜயை பார்த்து நடிகர் அஜித் பொறாமைப்பட்டதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

தற்போது லாக்டவுன் என்பதால் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் போன் மற்றும் தங்களின் கேன்டிட் கேமரா மூலம் எடுக்கப்படும் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். பல பிரபலங்கள் சோஷியல் மீடியாக்களில் லைவ் சேட் மற்றும் வீடியோ கால் மூலமாக தங்களின் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

யாரோ பெரிய கை

 

யாரோ பெரிய கை அந்த வகையில் பிரபல பாடகியும் சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியவருமான ஆர்ஜே சுசித்ரா ஊடகங்களுக்கு வீட்டில் இருந்தப் படியே நேர்க்காணல் அளித்து வருகிறார். சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை, அதற்கு பின்னால் யாரோ பெரிய கை இருக்கிறார்கள் என்றார்.

அஜித்தை சந்தித்தேன்

 

அஜித்தை சந்தித்தேன்

இந்நிலையில் மீண்டும் ஒரு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசியிருக்கிறார் சுசித்ரா. அவர் கூறிய அந்த விஷயம்தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. அதாவது பார்ட்டி ஒன்றில் பங்கேற்றபோது தான் அஜித்தை சந்தித்தாக கூறினார்.

 

எப்படி இப்படி அமையுது?

 

எப்படி இப்படி அமையுது?

அப்போது விஜயின் வேட்டைக்காரன் படத்தில் தான் பாடிய ஒரு சின்ன தாமரை பாடலை அஜித் வெகுவாக பாராட்டியதாகவும் கூறினார். மேலும் விஜய்க்கு மட்டும் நல்ல நல்ல பாடல்களாகவே கிடைக்கிறது என்றும் செல்லமாக பொறாமைக் கொண்டார் என்றும் வேடிக்கையாக கூறியுள்ளார் சுசித்ரா.

கடைசி பாடல்

 

கடைசி பாடல்

வேட்டைக்காரன் படம் பாபு சிவன் என்ற அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தில் விஜய் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோல் லீடிங் ரோலில் நடித்தனர். சுசித்ரா கடைசியாக அனிருத் இசையில் வணக்கம் சென்னை படத்தில் அய்லசா அய்லசா பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.