மன்னிப்பு கேட்ட ரைசா
இன்ஸ்டாகிராமத்தில் (இன்ஸ்டாகிராம்) சொந்தமாக வீடு கட்டி குடியேறிவிட்ட சினிமா பிரபலங்களை, தங்கள் ஏரியாவுக்கு அழைத்து வர டுவிட்டர், பேஸ்புக், ஹலோ உள்ளிட்ட மற்ற சமூகவலைதளங்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் போல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, பிரபலங்களை ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாட வைக்கும் வேலையை டுவிட்டர் செய்து வருகிறது.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் செட்டிலாகிவிட்ட நடிகை ரைசா வில்லசனை, #AskRaiza எனும் ஹேஷ்டேகில் ரசிகர்களுடன் பேச வைத்தது டுவிட்டர். அப்போது ரசிகர் ஒருவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரைசா பங்கேற்ற போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இந்த காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதா? பிக் பாஸ் கூடவே சண்டை போட்ட தைரியமான பெண்ணாச்சே நீங்கள் என குறிப்பிட்டிருந்தார்.