அஜித்தின் அந்த படம் படுதோல்வியடைய இயக்குனர் தான் காரணம், கொந்தளித்த தயாரிப்பாளர்!
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் இரண்டு விதமான கெட்டப்பில் நடித்து வருகின்றார் என செய்திகள் கிடைத்துள்ளது.
சரி இது ஒரு புறம் இருக்கட்டும், தயாரிப்பாளர் ராஜன், கௌதம் மேனன் செய்த சதியால் தான் என்னை அறிந்தால் படம் படுதோல்வி அடைந்தது.
அதை புரிந்துக்கொண்டு தான் அஜித் உடனே ரத்னத்திற்கு வேதாளம் படத்தை கொடுத்தார் என கூறியுள்ளார்.