அஜித் அனுப்பிய ஈமெயிலில் ஆடிப்போன வலிமை டீம்.. தல இப்படி சொல்லிட்டாரே என வினோத் வருத்தம்
ஆனால் வில்லன் யார் ஹீரோயின் யார் என்பதை தற்போது வரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக படக்குழுவினர் பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும் நமது ஆட்கள் ஏழாம் அறிவை பயன்படுத்தி ஹீமா குரேஷி நாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர்கள் கார்த்தி கேயா மற்றும் நவதீப் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
யுவன் சங்கர் ராஜா இசை, நிரவ் ஷா ஒளிப்பதிவு என நேர்கொண்ட படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் வலிமை படத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வலிமை படத்தில் தல அஜித் நடிக்கிறார் என்பது மட்டும் தான் பலருக்கும் அதிகாரபூர்வமாக தெரியும்.
ஆனால் வில்லன் யார் ஹீரோயின் யார் என்பதை தற்போது வரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக படக்குழுவினர் பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும் நமது ஆட்கள் ஏழாம் அறிவை பயன்படுத்தி ஹீமா குரேஷி நாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர்கள் கார்த்தி கேயா மற்றும் நவதீப் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
வலிமை படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முடிந்த நிலையில் கொரானா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு வரவேண்டிய வலிமை படம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிச் சென்றதாக தெரிகிறது.
சமீபத்தில் தமிழக அரசு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மட்டும் குறைந்த ஆட்களைக் கொண்டு தொடங்கலாம் என அறிக்கை வெளியிட்டது. ஆனால் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத்துக்கு அனுப்பிய மெயிலில் கொரானா தாக்கம் முழுவதுமாக முடிவடைந்த பின்னரே வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் அது சம்பந்தமான வேலையில் இறங்கலாம் என கூறி விட்டதாக தெரிகிறது.
இதனால் போனி கபூர் மற்றும் வினோத் ஆகியோர் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் தல அஜித்துக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்துக்கு எப்போது படம் வெளியிட்டாலும் போட்ட காசை எடுத்து விடலாம் என்று நம்பிக்கையாக இருக்கிறாராம் போனி கபூர்.