அஜித் அனுப்பிய ஈமெயிலில் ஆடிப்போன வலிமை டீம்.. தல இப்படி சொல்லிட்டாரே என வினோத் வருத்தம்

அஜித் அனுப்பிய ஈமெயிலில் ஆடிப்போன வலிமை டீம்.. தல இப்படி சொல்லிட்டாரே என வினோத் வருத்தம்

 

Ajith Kumar Rides 'Valimai' Bike from Hyderabad to Chennai?

            ஆனால் வில்லன் யார் ஹீரோயின் யார் என்பதை தற்போது வரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக படக்குழுவினர் பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும் நமது ஆட்கள் ஏழாம் அறிவை பயன்படுத்தி ஹீமா குரேஷி நாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர்கள் கார்த்தி கேயா மற்றும் நவதீப் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

தல அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது அனைவரும் அறிந்ததே. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். போனி கபூர் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை, நிரவ் ஷா ஒளிப்பதிவு என நேர்கொண்ட படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் வலிமை படத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வலிமை படத்தில் தல அஜித் நடிக்கிறார் என்பது மட்டும் தான் பலருக்கும் அதிகாரபூர்வமாக தெரியும்.

ஆனால் வில்லன் யார் ஹீரோயின் யார் என்பதை தற்போது வரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக படக்குழுவினர் பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும் நமது ஆட்கள் ஏழாம் அறிவை பயன்படுத்தி ஹீமா குரேஷி நாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர்கள் கார்த்தி கேயா மற்றும் நவதீப் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முடிந்த நிலையில் கொரானா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு வரவேண்டிய வலிமை படம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிச் சென்றதாக தெரிகிறது.

சமீபத்தில் தமிழக அரசு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மட்டும் குறைந்த ஆட்களைக் கொண்டு தொடங்கலாம் என அறிக்கை வெளியிட்டது. ஆனால் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத்துக்கு அனுப்பிய மெயிலில் கொரானா தாக்கம் முழுவதுமாக முடிவடைந்த பின்னரே வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் அது சம்பந்தமான வேலையில் இறங்கலாம் என கூறி விட்டதாக தெரிகிறது.

இதனால் போனி கபூர் மற்றும் வினோத் ஆகியோர் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் தல அஜித்துக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்துக்கு எப்போது படம் வெளியிட்டாலும் போட்ட காசை எடுத்து விடலாம் என்று நம்பிக்கையாக இருக்கிறாராம் போனி கபூர்.

தன்னுடைய காதலை பற்றி மனம் திறக்கும் திரிஷா….

தன்னுடைய காதலை பற்றி மனம் திறக்கும் திரிஷா….

 

 

 

தென்னிந்திய சினிமாவின் குயின் கதாநாயகி திரிஷா வீட்டில் தங்கவும் ஓய்வெடுக்கவும் நேரம் கிடைக்க செய்த ஊரடங்குக்கு நன்றி என்று கூறுகிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் அவர் நேரத்தைப் பயன்படுத்துகிறார், மேலும் அவரது ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு வழக்கமான சமூக ஊடக தொடர்புகளையும் கொண்டிருக்கிறார்.

தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் நேரடி உரையாடலில், த்ரிஷா தனது வாழ்க்கையை பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார், மேலும் ரசிகர்களும் தனிப்பட்ட முறையில் கேள்விகளை கேட்டனர் . தந்திரமான கேள்விக்கு “உண்மையான காதல் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டதற்கு , “நிச்சயமாக, உண்மையிலேயே, அப்படி ஒரு அன்பு இருக்கிறது … மேலும் அந்த காதலை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று அதற்கு த்ரிஷா பதிலளித்தார்.

த்ரிஷாவின் விருப்பமான பாடல் கவுதம் மேனன் இயக்கத்தில், ரஹ்மானின் இசையில் வெளிவந்த “மன்னிப்பாயா ” பாடலாம் . இப்போது “உங்கள் வாழ்க்கையின் துணையை நீங்கள் கண்டுபிடித்தீர்களா? என்ற கேள்விக்கு திரிஷா எளிமையாக ” நாங்கள் இதுவரை சந்திக்கவில்லை. “… அவர் விரைவில் வருவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று பதிலளித்திருக்கிறார். , மேலும் எனது ரசிகர்கள் அனைவருக்கும் அதை அறிவிப்பேன் என்றும் கூறுகிறார்.

திரிஷாவின் வரவிருக்கும் படங்களில் மணி ரத்னத்தின் ‘பொன்னியன் செல்வன்’, ‘ராங்கி’, ‘பரமபத விளையாட்டு ‘ ஆகியவை அவரது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சினிமா தொழிலாளர்கள் நலன் கருதி அஜித் எடுத்த அதிரடி முடிவு!

சினிமா தொழிலாளர்கள் நலன் கருதி அஜித் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு படப்பிடிப்பை ரத்து செய்திருந்தது வலிமை படக்குழு

 

சினிமா தொழிலாளர்கள் நலன் கருதி அஜித் எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் அஜித்

 

சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை இப்போது தொடங்க வேண்டாம் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக திரைத்துறை முற்றிலுமாக முடங்கியிருந்த நிலையில், கடந்த 11-ம் தேதி முதல் படப்பிடிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை கட்டுப்பாடுகளுடன் தொடங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து இந்தியன் 2, மாஸ்டர், சக்ரா உள்ளிட்ட படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் வலிமை படத்தின் பணிகளும் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு முழுவதுமாக முடிந்து இயல்புநிலை திரும்பிய பிறகு படத்தின் பணிகளை ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்க்கு அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வலிமை படத்தின் பணிகள் தொடங்க இன்னும் சில மாதங்களாகும் என்றும் கூறப்படுகிறது.


வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு படப்பிடிப்பை ரத்து செய்திருந்தது படக்குழு.

விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் – பிரபல நடிகை…

விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் – பிரபல நடிகை…

 

விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.

 

விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் - பிரபல நடிகை

 

நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் குறித்துக் கூறியிருப்பதாவது:-
“தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் நான் ஆச்சர்யப்படும் வி‌ஷயம், அவர்களைப் பொறுத்தவரை திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன. அவர் அவர்களது கலாசாரத்தின் ஒரு பகுதியாக, அவர்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒரு வி‌ஷயமாக சினிமா உள்ளது.
‘வீரம்‘தான் அஜித்துடன் எனக்கு முதல் படம். மிகப்பெரிய கமர்சியல் வெற்றியாக அமைந்த படம் அது. அது ஒரு கமர்சியல் படமாக இருந்தாலும் ஒரு நடிகையாக எனக்கு நடிக்க அதிக சந்தர்ப்பங்களை வழங்கிய படம். எனக்குத் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம். விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள்.
நடிகை தமன்னா
நம் தலைமுறை மட்டுமல்லாது இனி வரப்போகிற தலைமுறைகளையும் மகிழ்விக்கும் நடிகர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இருவருக்குமே அற்புதமான ரசிகர் கூட்டம் உள்ளது. தொடர்ந்து அந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று நினைக்கிறேன்”.
இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.

சர்ச்சை வீடியோவை நீக்க வேண்டும் – விஜய் சேதுபதி தரப்பு சைபர் கிரைமில் புகார்…

சர்ச்சை வீடியோவை நீக்க வேண்டும் – விஜய் சேதுபதி தரப்பு சைபர் கிரைமில் புகார்…

 

சர்ச்சை வீடியோவை நீக்க வேண்டும் - விஜய் சேதுபதி தரப்பு சைபர் கிரைமில் புகார்

 

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன் இடத்தை பிடித்துள்ள விஜய் சேதுபதி, சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது, கோவில்களில் அபிஷேகம் செய்வது குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை தற்போது சிலர் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். இதையடுத்து இந்து கடவுள்களுக்கு எதிராக அவர் பேசி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.
விஜய் சேதுபதி மீது இந்து அமைப்பு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிராக விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், “விஜய்சேதுபதி ஒரு வருடத்துக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது கிரேசி மோகன் சொன்ன நகைச்சுவை துணுக்கை மறுபதிவு செய்திருந்தார்.
விஜய் சேதுபதி
அப்படி யதார்த்தமாக சொன்னதை மாற்றி இந்துக்களுக்கு எதிராக பேசியதாக அந்த காணொலியை எடிட் செய்து சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவதூறாக பதிவிடுகிறார்கள். அந்த பதிவுகளையும், காணொலியையும் நீக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகர்…

மகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகர்…

 

கொரோனா ஊரடங்கு உத்தரவால் சலூன் கடைகள் திறக்காததால் பிரபல நடிகர் தன் மகனுக்கு தானே முடி வெட்டி அழகு பார்த்திருக்கிறார்.

 

மகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகர்

ஜெயம் ரவி மூத்த மகன் ஆரவுக்கு முடிவெட்டிய காட்சி

 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் ஆண்கள் சலூன்களுக்கு செல்ல முடியாமல் தாடியும், மீசையுமாக, நீண்ட தலைமுடியுடன் உள்ளனர். குழந்தைகளும் முடி வளர்ந்து அதை வெட்ட ஆள் இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் ஜெயம் ரவி மூத்த மகன் ஆரவுக்கு முடிவெட்டிவிட்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜெயம் ரவி தன் மகனுடன்
ஜெயம் ரவி மட்டும் அல்ல மேலும் சில நடிகர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு முடிவெட்டிவிட்டுள்ளனர். ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் ஆரவ் தன் அப்பாவின் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை மறக்க முடியாது – ஆண்ட்ரியா…

மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை மறக்க முடியாது – ஆண்ட்ரியா…

 

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை மட்டும் என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

 

மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை மறக்க முடியாது - ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

 

பாடகியாகவும் நடிகையாகவும் பல பரிமாணங்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவர் ஆண்ட்ரியா. தனக்கு கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே படங்களில் பணியாற்றும் வழக்கம் கொண்ட ஆண்ட்ரியா, மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. அவரது கதாபாத்திரம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், நடிகை ஆண்ட்ரியா மிகவும் எதிர்பார்க்கப்படும் மாஸ்டர் படத்தில் தனது பங்கைப் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
மாஸ்டர் படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டுக்கு ஆண்ட்ரியா வராத போதும் கூட, மேடையிலேயே விஜய், ‘ஆண்ட்ரியா தொடர்ந்து அதிக படங்களில் பணியாற்ற வேண்டும்‘ எனக் கூறியிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 மாஸ்டர் படத்தின் கார் சேஸிங் காட்சி.
இந்நிலையில், நேர்காணலில் தனது ரசிகர்களிடம் பேசிய இவர், மாஸ்டர் படப்பிடிப்பின் போது தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகையாகி விட்டதாக ஒப்புக்கொண்டார். மேலும், மாஸ்டர் படத்தில் ஒரு கார் சேஸிங் காட்சி சிறப்பு அம்சமாக இருக்கும் என்றும் அந்த காட்சி தனக்கு மறக்கமுடியாத ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாட்டுத் தொழுவத்தில் மேக்கப் போட்ட விஜய் ஆண்டனி…

மாட்டுத் தொழுவத்தில் மேக்கப் போட்ட விஜய் ஆண்டனி…

 

vijay-antony-release

 

‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பின் போது மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

தற்போது ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. மேலும் பெயரிடப்படாத சில படங்களிலும் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் அவதிக்கு உள்ளாகியுள்ள தயாரிப்பாளர்களை கணக்கில் கொண்டு, நடிகர்களில் முதல் நபராக தனது சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.

 

விஜய் ஆண்டனியின் இந்த அறிவுக்குத் தமிழ்த் திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். ஹரிஷ் கல்யாண், மஹத், இயக்குநர் ஹரி, ஹார்த்தி உள்ளிட்டோரும் தங்களுடைய சம்பளத்தையும் குறைக்க முன்வந்துள்ளனர்.

இதனிடையே ‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பதிவில் விஜய் ஆண்டனி குறித்து புகைப்படங்களுடன் கூறியிருப்பதாவது:

“சுவிட்சர்லாந்தில் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் மகத்தான மனிதர் தன் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. சென்னையில் காரில் ஏசி போட்டுக் கொள்ளாதவர் ரஷ்யாவின் -20 டிகிரி குளிரை எங்களுக்காகத் தாங்கி நடித்ததுதான் பெரிய விஷயம்”

இவ்வாறு இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.

 

 

மாட்டுத் தொழுவத்தில் மேக்கப் போட்ட விஜய் ஆண்டனி…

மாட்டுத் தொழுவத்தில் மேக்கப் போட்ட விஜய் ஆண்டனி…

 

vijay-antony-release

 

‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பின் போது மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

தற்போது ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. மேலும் பெயரிடப்படாத சில படங்களிலும் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் அவதிக்கு உள்ளாகியுள்ள தயாரிப்பாளர்களை கணக்கில் கொண்டு, நடிகர்களில் முதல் நபராக தனது சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.

 

விஜய் ஆண்டனியின் இந்த அறிவுக்குத் தமிழ்த் திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். ஹரிஷ் கல்யாண், மஹத், இயக்குநர் ஹரி, ஹார்த்தி உள்ளிட்டோரும் தங்களுடைய சம்பளத்தையும் குறைக்க முன்வந்துள்ளனர்.

இதனிடையே ‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பதிவில் விஜய் ஆண்டனி குறித்து புகைப்படங்களுடன் கூறியிருப்பதாவது:

 

“சுவிட்சர்லாந்தில் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் மகத்தான மனிதர் தன் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. சென்னையில் காரில் ஏசி போட்டுக் கொள்ளாதவர் ரஷ்யாவின் -20 டிகிரி குளிரை எங்களுக்காகத் தாங்கி நடித்ததுதான் பெரிய விஷயம்”

 

இவ்வாறு இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியாகிறது மாஸ்டர்….

தீபாவளிக்கு வெளியாகிறது மாஸ்டர்….

 

master-release

 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது ‘மாஸ்டர்’ பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார்.

 

இன்னும் 15 நாட்களுக்குள் ‘மாஸ்டர்’ படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடிந்துவிடும். ஆனால் தயாரிப்பு தரப்போ முதல் பிரதியை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது தெரியாமல் உள்ளது. அப்படித் திறந்தாலுமே பல்வேறு நடைமுறைகளை தமிழக அரசு பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தும். இதனால் மக்கள் திரையரங்குகளுக்குக் கூட்டமாக வருவார்களா என்பது கேள்விக்குறி தான்.

இதனாலேயே, ‘மாஸ்டர்’ படத்தை தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இப்போதைக்கு எந்தவொரு அப்டேட், டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவை வேண்டாம் எனவும் முடிவு செய்திருக்கிறார்கள். விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி புதிதாக ஒரு போஸ்டர் மட்டும் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளனர்.

 

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தினா, ரம்யா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாவதற்குள், கண்டிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தை விஜய் தொடங்கிவிடுவார் என்கிறார்கள்.