மீண்டு வருவோம்!

மீண்டு வருவோம்!

 

Border Collie

 

சில நாட்கள் இடைவெளிக்கு பின், மீண்டும், ‘டுவிட்டர்’ பக்கம் வந்த நடிகர் விவேக், ‘சுகாதார அறிவுறுத்தலை கடைப்பிடிப்பதும் ஒரு சிகிச்சையே’ எனக் குறிப்பிட்டு

 

இது குறித்து அவர் கூறுகையில், ‘இடிபாடுகளுக்கு இடையில், பூச்செடி வளர்வது போல் நாமும் மீண்டு வருவோம். குப்பைக்கு மத்தியில், ரோஜாக்களை போல் எழுந்திருப்போம். நம்பிக்கையே எங்கள் உரம். சுகாதார அறிவுறுத்தலை கடைப்பிடிப்பதும் ஒரு சிகிச்சையே’ என்றார்.ள்ளார்.

அப்பா, அம்மாவுக்கு விதவிதமாக சமைத்து போடுகிறார் சிம்பு!

அப்பா, அம்மாவுக்கு விதவிதமாக சமைத்து போடுகிறார் சிம்பு!

 

அப்பா, அம்மாவுக்கு விதவிதமாக சமைத்து போடுகிறார் சிம்பு!

 

ஊரடங்கு விடுமுறையில் அப்பா டி.ராஜேந்தருக்கும், அம்மா உஷா ராஜேந்தருக்கும் விதவிதமாக, சிம்பு வகை வகையாக சமைத்துப் போட்டு இருக்கிறார்.
தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும்பாலான நடிகைகளுக்கு சமையல் நன்றாக தெரியும். பழம்பெரும் கதாநாயகியான சவுகார் ஜானகி, சமையல் கலையில் தேர்ந்தவர். அவரை, ‘சமையல் ராணி’ என்றே அழைப்பார்கள். இவருக்கு ஓட்டல் நடத்திய அனுபவமும் உண்டு. இவரைப்போல் ராதிகா சரத்குமார், குஷ்பு, சுஹாசினி, மீனா, ரோஜா, ரேகா ஆகியோரும் சமையல் தெரிந்த நாயகிகள்.
சமையல் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு கூட, சமையலறை பக்கம் ஒதுங்காத அந்த நடிகைகள், ‘கொரோனா மற்றும் ஊரடங்கு புண்ணியத்தில் சமையல் கற்றுக்கொண்டார்கள்’.
அவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, காஜல் அகர்வால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள். நடிகர்களில் சமையல் கலையில் தேர்ந்தவர், அஜித்குமார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். அவரை, ‘நள மகாராஜா’ என்று நெருங்கிய நண்பர்கள் அழைப்பார்கள். அஜித் கையினால் சமைத்த பிரியாணியின் வாசனையையும், ருசியையும் அதை சாப்பிட்டவர்களால் மறக்க முடியாதாம். அத்தனை ருசி!. ஆர்யா, விஷால், சூரி ஆகிய மூன்று பேருக்கும் நன்றாகவே சமைக்க தெரியுமாம்.
இந்த பட்டியலில் புதுசாக சேர்ந்திருப்பவர், சிம்பு!. இவருக்கு ருசியாக சமைக்க வருமாம். ஊரடங்கு விடுமுறையில் இவர் அப்பா டி.ராஜேந்தருக்கும், அம்மா உஷா ராஜேந்தருக்கும் விதவிதமாக, வகை வகையாக சமைத்துப் போட்டு இருக்கிறார். “சைவம் மற்றும் அசைவம் இரண்டையும் மிக ருசியாக சமைப்பதில் தேர்ந்தவர், சிம்பு. அந்த வகையில், சிம்புவின் வருங்கால மனைவி கொடுத்து வைத்தவர்தான்” என்கிறார்கள் அவர்களின் நண்பர்கள்!.

படங்கள் ஓடாவிட்டால் நடிகர்களை குறை சொல்லக்கூடாது – பிரியாமணி

படங்கள் ஓடாவிட்டால் நடிகர்களை குறை சொல்லக்கூடாது – பிரியாமணி

 

படங்கள் ஓடாவிட்டால் நடிகர்களை குறை சொல்லக்கூடாது - பிரியாமணி

படங்கள் ஓடாவிட்டால் நடிகர்களை குறை சொல்லக்கூடாது என நடிகை பிரியாமணி கூறியுள்ளார்

தமிழில் பருத்திவீரன் படத்தில் தேசிய விருது பெற்ற பிரியாமணி, தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ராணாவுடன் விராட பருவம் படத்தில் நடித்து வருகிறார்.

இது நக்சலைட்டுகள் பற்றிய கதை என்றும், பிரியாமணி பெண் நக்சலைட்டாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்தியில் அஜய்தேவ்கானுடன் மைதான் படத்திலும் நடிக்கிறார். தற்போது ஊரடங்கு நேரத்தை குடும்பத்துடன் கழிக்கிறார்.
பிரியாமணி கூறியதாவது:-
“எனது வாழ்க்கையில் பருத்திவீரன், சாருலதா, மலையாளத்தில் திரைக்கதா ஆகிய 3 படங்களையும் மறக்க முடியாது. இந்த படங்களில் எனது கதாபாத்திரம் சவால் நிறைந்ததாக இருந்தன. ஒவ்வொரு படத்திலுமே கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்தேன். படங்கள் ஓடியதா, இல்லையா என்பது பற்றி கவலை இல்லை. படம் ஓடவில்லை என்றால் அதில் நடித்த நடிகர்-நடிகைகளை குறை சொல்லக் கூடாது.
கதை கேட்கும்போது நன்றாக போகும் என்றுதான் படத்தை ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் படம் வெளியாகும்போது சில மாற்றங்கள் இருக்கும். ஊரடங்கில் கணவர் முஸ்தபா வீட்டில் இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு இப்போதுதான் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுகிறேன். சமையல் செய்கிறேன். திரைப்படங்கள், வெப் தொடர்களும் பார்க்கிறேன்”.
இவ்வாறு பிரியாமணி கூறினார்.

ரோபோ சங்கர் வீட்டை சோகத்தில் ஆழ்த்திய மரணச்செய்தி!

ரோபோ சங்கர் வீட்டை சோகத்தில் ஆழ்த்திய மரணச்செய்தி!

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ரோபோ சங்கர்.

நடிகர் ரோபோ ஷங்கர் வீட்டில் அரங்கேறியுள்ள ஒரு துக்க சம்பவம் அவரை மட்டும் இன்றி, அவருடைய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

பிரியங்காவின் அம்மா, ரோபோ ஷங்கரின் மாமியார் லலிதா உடல்நல பிரச்சனை காரணமாக நேற்று அதிகாலை, (11 ஆம் தேதி அன்று ) மரணமடைந்துள்ளார். இதனால் அவருடைய ஒட்டு மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதை அறிந்த ரோபோ ஷங்கரின் ரசிகர்கள் மற்றும்நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.

எப்படி அஜித் இந்த தன்மை வந்தது? தல செம்ம கூல் பதில்

எப்படி அஜித் இந்த தன்மை வந்தது? தல செம்ம கூல் பதில்

ArtStation - Viswasam Thala Ajith, Pandiyan Pixels

 

 

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் தயாராகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 60% முடிந்துள்ளதாம். இந்நிலையில் கொரொனா பிரச்சனைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

தற்போது அஜித்தின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. இதில் அஜித் எப்படி இவ்வளவு பொறுமை, நிதானம் வந்தது என கேட்டனர்.

அதற்கு அஜித் வயது தான் என சிரித்துக்கொண்டே பதில் அளிக்கின்றார். மேலும், இன்னும் 10 வருடம் கழித்து மேலும் பக்குவம் வந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் ரூ 200 கோடி வசூல் செய்த டாப் 10 தென்னிந்திய படங்கள், முழு லிஸ்ட் இதோ

தென்னிந்திய சினிமா அளவில் ரூ 200 கோடி வசூல் செய்த கதாநாயகர்களாக திகழ்ந்து வரும் நடிகர்கள் பற்றி தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

 

 

1. எந்திரன்

2. ஐ

3. பாகுபலி

4. கபாலி

5. பாகுபலி 2

6. அல வைக்குண்டபரமலு

7. ரங்கஸ்தலம்

8. 2.0

9. கே.ஜி.எப்

10. பிகில்

விழுப்புரம் சிறுமி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்: விவேக்

விழுப்புரம் சிறுமி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்: விவேக்

 

vivek-about-jayasri

விழுப்புரம் சிறுமி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றனர்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு முன்பாகவே தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது சிறுமியின் மரணம் தொடர்பாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“மனித மனங்கள் ஈரத்துடனும் இரக்கத்துடனும் சக மனிதனைப் பேண வேண்டிய இத்தருணத்தில் ஒரு 15 வயதுப் பெண்னை ஈவு இரக்கமின்றி தீயிட்டது பெரும் சோகம். அந்தச் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும்”.

 

இவ்வாறு விவேக்  தெரிவித்துள்ளார்.

சமையல் கற்றுக் கொள்ளும் காஜல் அகர்வால்!

சமையல் கற்றுக் கொள்ளும் காஜல் அகர்வால்!

 

 

கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு: “நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் வீட்டில் அதிக நாட்கள் இருந்தது இதுதான் முதல் தடவையாகும். குடும்பத்தோடு நேரத்தை கழித்துக்கொண்டு இருக்கிறேன். அம்மா, அப்பாவுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊரடங்கு நேரத்தை வீணாக்கவில்லை.

எல்லோரும் கொரோனா கஷ்ட காலத்தில் பயத்துடன் மூச்சை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து எப்படியாவது மீள வேண்டும். மீள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் அம்மாவுக்கு நெருக்கம். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் எனது அம்மாதான். என்னை சரியான பாதையில் வழி நடத்தினார். எனக்கு சமையல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆண்டுகளாக அவர் முயற்சி செய்து கொண்டே இருந்தார்.

ஆனால் எனக்கு நேரம் இல்லை. எப்போதுதான் கற்றுக்கொள்ள போகிறாயோ? என்று கூறிக்கொண்டே இருப்பார். இப்போது கொரோனா ஊரடங்கில் அம்மாவிடம் சமையல் கற்றுக்கொள்கிறேன். சமையல் அறை பொறுப்பையும் எடுத்துக்கொண்டேன். இதை பார்த்து அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். கொரோனா ஊரடங்கில் 2 மாதமாக அம்மாவுடன் சேர்ந்து இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது”.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

இந்த விஜய் பயலுக்கு எப்படி இது அமையுது ? என்று வருத்தப்பட்ட அஜித் ! சுச்சி Leaks சுசித்ரா Open Talk !

இந்த விஜய் பயலுக்கு எப்படி இது அமையுது ? என்று வருத்தப்பட்ட அஜித் ! சுச்சி Leaks சுசித்ரா Open Talk !

 

 

விஜய், அஜித்துக்கு கோடி கணக்கில் ரசிகர்கள் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இருவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு ரசிகர்களின் பலத்தை நம்புபவர்கள்.

தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்திற்கு தயாராகிறார். தல இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். CORONA வைரஸினால் தற்போது தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூட்டிங் இல்லாமல் அல்லாடிக் கிடக்கிறது.

இந்தநிலையில் சுச்சி Leaks புகழ் பின்னணிப் பாடகி சுசித்ரா அவர்கள், சில நாட்களுக்கு முன்பு, Live பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில், “அஜித்துக்கு என்னுடைய சின்ன தாமரை பாட்டு ரொம்ப பிடிக்கும், அந்த பாட்டு வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு பாடினேன், அதை கேட்டு, இந்த விஜய் பயலுக்கு மட்டும் நல்ல நல்ல பாட்டா அமையுது” என்று சுசித்ராவிடம் செல்லமாக வருத்தபட்டாராம்.

இந்த பேட்டி விஜய் ரசிகர்களை கோவபடுத்தியுள்ளது. “எங்கள் தளபதி உங்கள் தலையை நண்பன் என்று கூறினார். அதுதான் அஜீத் மீது விஜய் வைத்திருக்கும் மரியாதை ஆகும். ஆனால் அஜீத் விஜயை மதிக்காமல் அந்தப் பையன் இந்த பையன் என்று பேசியுள்ளார் என்று விஜய் ரசிகர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இது செல்ல கோபம், செல்ல சண்டை என்று எப்படி புரிய வைப்பது?.

தன் காதலியை பகிரங்கமாக வெளிப்படுத்திய பிரபல நடிகர்

தன் காதலியை பகிரங்கமாக வெளிப்படுத்திய பிரபல நடிகர்

 

‘பாகுபலி’ படத்தில் நடித்த பிறகு ராணா டகுபட்டி இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகரக மாறினார்.

சமீபத்தில் த்ரிஷாவின் பிறந்தநாளுக்குக் கூட வாழ்த்து தெரிவித்திருந்த ராணா அப்போது த்ரிஷாவை ‘பழைய தோழி’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அது ஏன் என்று தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

 

நேற்று (மே 12) தன்னுடைய காதலியை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் ராணா. காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து ”அவள் சம்மதம் சொல்லிவிட்டாள்,” எனப் பதிவிட்டிருக்கிறார்.

ராணாவுக்கு பலரும் வாழ்த்துகளைச் சொல்லி வருகிறார்கள்.