ஜெயம் ரவி பற்றிய புதிய கண்டுபிடிப்பை வெளியிட்ட சதீஷ்
போகன் படத்தை தொடர்ந்து லக்ஷ்மன் இயக்கத்தில் ‘பூமி’ என்கிற படத்தில் ஜெயம் ரவி நடித்துவருகிறார். இந்தப்படத்தில் ஜெயம் ரவியுடன் முதன்முறையாக காமெடி கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் சதீஷ்.. இந்தநிலையில் சமீபத்தில் டிவியில் ‘பாவா பாவாமரிதி’ என்கிற தெலுங்குப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த சதீஷ் அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சிறுவனை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாராம்
ஆம் சாட்சாத் அது ஜெயம் ரவியே தான்.. ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் முன்பே தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அந்த வீடியோ காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சதீஷ் ‘அழகோ அழகு’ என ஜெயம் ரவியை புகழ்ந்துள்ளார்.