அருண் பிரசாத் மரணம் : ஷங்கர் இரங்கல்
இயக்குனர் ஷங்கரின் உதவியாளரும், ஜிவி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வந்த 4ஜி படத்தை இயக்கி இயக்குனராக களமிறங்கிய அருண் பிரசாத்(வெங்கட் பாக்கர்) சாலை விபத்தில் இன்று(மே 15) காலை பலியானார். முதல் படம் வெளியாகும் முன்பே அவர் மரணத்தை தழுவியது 4ஜி படக்குழுவினரையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குனர் ஷங்கர் டுவிட்டரில், என் முன்னாள் உதவியாளரும், இளம் இயக்குநருமான அருணின் திடீர் மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் இனிமையானவர், நேர்மறையானவர். கடின உழைப்பாளி நீ. உனக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன். உன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.