கொரோனா சூழலில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 5 முதல் விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட உள்ளன. குடும்பத்தில் ஒருவருக்கு தலா 2 என்கிற வீதத்தில் விலையில்லா முகக்கவசம் வழங்கப்படும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் தூர்வாரப்படாததால் கடைமடைக்கும் தண்ணீர் சென்றுள்ளது. தமிழகம் முழுவதும் குடிமரத்துப்பணிகள் 85 சதவீதம் அளவிற்கு நிறைவு பெற்றுள்ளன. விலையில்லா முகக்கவசம் மற்றும் முகாம்களால் சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள் தமிழகம் முழுவதும் போதுமான அளவில் உள்ளன. சென்னையில் மட்டும் கொரோனா ஒழிப்பு பணியில் சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில்
பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? பேருந்து, ரயில் சேவைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.