உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் எப்போது தான் குறையும். இன்னும் எத்தனை பேரை பலி வாங்கும். இது எப்போது தான் குறையும். பொருளாதாரம் என்னவாகும் என்ற பல கேள்விகள் நம் மனதில் எழுந்து வருகின்றன. ஆனால் அதற்கு இன்று வரை அதற்கு யாரும் சரியான பதில் கூற இயலவில்லை என்பதே உண்மை.
அதுவும் கற்பனையில் கூட நினைத்துக் கூட பார்த்திராத நிலையில் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என்ற அளவுக்கு கொரோனா பொருளாதாரத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.
அது மட்டும் அல்ல, பொருளாதாரம் மீண்டு வர சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மீண்டு வந்த பின்னரும் கூட, முடங்கிய தொழில்கள் புத்துயிர் பெற பல மாதங்கள்.. ஏன் ஆண்டுகள் கூட ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
கற்பனை செய்ய முடியாத அளவு வளர்ச்சி குறையும்
இந்த நிலையில் 2020ம் ஆண்டின் முதல் 6 மாதத்திற்கான வளர்ச்சி கற்பனை செய்ய முடியாத அளவிற்கு குறையும் என்பதில் நிபுணர்களிடையே எந்த மாற்று கருத்தும் இல்லை. இப்படி இருக்கக் கூடிய நிலையில், இனி வரும் காலங்கள் இன்னும் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சமானிய மக்கள் தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தை மிக சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய தருணம் இது என்பதையும் பொருளாதார நிபுணர்கள் சுட்டி காட்டுகின்றனர்.
ஆலைகள் அனைத்தும் மூடல்
இந்த நிலையில் 2020ம் ஆண்டின் முதல் 6 மாதத்திற்கான வளர்ச்சி கற்பனை செய்ய முடியாத அளவிற்கு குறையும் என்பதில் நிபுணர்களிடையே எந்த மாற்று கருத்தும் இல்லை. இப்படி இருக்கக் கூடிய நிலையில், இனி வரும் காலங்கள் இன்னும் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சாமானிய மக்கள் தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தை மிக சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய தருணம் இது என்பதையும் பொருளாதார நிபுணர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

பல லட்சம் பேர் வேலை இழப்பு
இதனால் பல லட்சம் மக்கள் தற்காலிகமாக வேலையிழந்துள்ளனர். இன்னும் சில நிறுவனங்கள் செலவினை கட்டுப்படுத்த ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா உக்கிரமாக அதிகரித்து வரும் நிலையில், பல லட்சம் பேர் தங்களது வேலையினை தொடர்ந்து இழந்து வருகின்றனர். இதனால் அவர்கள் வேலையின்மை நலனுக்காக விண்ணப்பித்து வருகின்றனர். இது வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு அரசு கடந்த வாரத்திலேயே அறிவித்தது.

ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம்
நாளுக்கு நாள் கொரோனாவின் உக்கிரம் அமெரிக்காவில் அதிகரித்து வரும் அதே நேரத்தில், வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. இந்த தாக்கத்தினை குறைக்கவும், ஊழியர்களின் நலனுக்காகவும் அமெரிக்கா பல அதிரடி திட்டங்களை எடுத்து வருகிறது. மேலும் பொருளாதாரத்தினை உயர்த்தவும் பல அதிரடியான திட்டங்களை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலையானது ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
