rfxsignals July 29, 2020 No Comments

தெஹ்ரான்: ஐக்கிய அரபு எமிரேட்சில், இந்தியாவுக்கு வருகை தரும் ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஈரானிய ராணுவ பயிற்சி மற்றும் ஏவுகணைகள் அதற்கு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு அருகே, பயிற்சிகள் மேற்கொண்டுள்ளன.

 

    நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்ட Rafale.. IAF வெளியிட்ட புகைப்படம்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் உள்ள அல் தஃப்ரா விமான நிலையம், தலைநகரான அபுதாபியில் இருந்து சுமார் ஒரு மணி நேர தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அல் தஃப்ரா தளத்தில் அமெரிக்கா மற்றும் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் மற்றும் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில்தான், பிரான்சிலிருந்து இந்தியாவுக்கு வரும் 5 ரஃபேல் போர் விமானங்கள், நேற்று இரவு அல் தஃப்ரா தளத்தில் தரையிறங்கியது. அங்கு அவை ஓய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

     

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இப்படியான சூழ்நிலையில்தான், ஈரான் நாட்டின், இஸ்லாமிக் புரட்சி கார்ட் கார்ப்ஸ் (IRGC) ராணுவ பயிற்சி மற்றும் ஏவுகணை பயிற்சிகளை மேற்கொண்டது. இந்த ஏவுகணை அல் தஃப்ரா விமானப் படை தளம் நோக்கி சீறிச் செல்லக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து உளவுத்துறை, எச்சரிக்கைவிடுத்தது.

    இரு விமானப் படை தளங்கள்

    இரு விமானப் படை தளங்கள்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமானப் படை தளமும், கத்தாரிலுள்ள அல் உதீட் விமானப் படை தளமும் எச்சரிக்கையாக இருக்கும்படி வார்னிங் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க செய்தி சேனல் சி.என்.என்னின் பார்பரா ஸ்டார் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஆனால், எந்த ஏவுகணைகளும் இந்த தளங்களில் ஒன்றையும் தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈரான் ஏவுகணைகள்

    ஈரான் ஏவுகணைகள்

    அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிக்கையாளர் லூகாஸ் டாம்லின்சனும் இந்த சம்பவத்தை உறுதி செய்தார். ஒரு ட்வீட்டில், டாம்லின்சன், மத்திய கிழக்கு பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். 3 ஈரானிய ஏவுகணைகள் டியூஸ் தளங்களுக்கு அருகே தண்ணீரில் விழுந்துள்ளன, என்று, அதிகாரியை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.

    பதுங்கு குழியில் அமெரிக்க வீரர்கள்

    பதுங்கு குழியில் அமெரிக்க வீரர்கள்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளில் மறைந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார். ராணுவப் பயிற்சியின் போது ஈரான் புரட்சி படை படகுகளிலிருந்து ஏவுகணையை ஏவிய படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஈரானிய கமாண்டோக்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக கீழே இறங்கி பயிற்சி செய்யும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

    ரபேல் விமானங்கள்

    ரபேல் விமானங்கள்

    அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இடையே நமது ரபேஃல் விமானங்களும், எமிரேட்ஸில் இருந்ததால், இந்திய தரப்பும் உஷார் நிலையில் இருந்துள்ளது. இந்தியா மற்றும் ஈரான் நாடுகள் இடையே நட்புறவு நிலவும் நிலையில், நமது போர் விமானத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற வாய்ப்பு இல்லை. இது அமெரிக்க படைகளுக்கு எதிரான போர் பயிற்சிதான் என்கிறார்கள் இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.