rfxsignals May 15, 2020 No Comments

இந்த விஷயத்தை இத்தன வருஷமா யாருக்கும் தெரியாம மறச்சுட்டீங்களே சிம்பு

                                                      லாக்டவுனில் வீட்டில் முடங்கியிருக்கும் சிம்பு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

 

 

simbu

 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. லாக்டவுன் 4.0 வரும் என்று தெரிகிறது.

படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் முடங்கியிருக்கும் சிம்பு ஒர்க்அவுட் செய்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் சிம்பு ஒர்க்அவுட்டோட நிறுத்தவில்லை. சமையல் அறைக்குள் புகுந்து வித, விதமாக சமைத்து அசத்திக் கொண்டிருக்கிறாராம்.

 

அம்மா உஷா, அப்பா டி. ராஜேந்தர் ஆகியோர் சிம்புவின் சமையலை சாப்பிட்டு கண் கலங்கிவிட்டார்களாம். அந்த அளவுக்கு ருசியாக சமைக்கிறாராம் சிம்பு. அவருக்கு படம் இயக்கத் தெரியும், நடிக்கத் தெரியும், பாடத் தெரியும், ஆடத் தெரியும் ஆனால் சமைக்கவும் தெரியும் என்பது மட்டும் நமக்கு இத்தனை காலமாக தெரியாமல் போச்சே.

 

அஜித் நன்றாக சமைப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிம்பு மேட்டர் இப்போ தானே வெளியே வந்திருக்கிறது. அப்படி என்றால்படப்பிடிப்பு மீண்டும் துவங்கிய பிறகு படக்குழுவுக்கு தன் கையால் சமைத்துப் போட்டு அசத்துவாரா சிம்பு என்கிற கேள்வி எழுந்துள்ளது

மாநாடானு கேட்கக் கூடாது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு இஸ்லாமியராக நடித்து வரும் படம் தான் அது. அந்த படத்தில் சிம்பு அரசியல் பேசுவதை பார்க்க ரசிகர்கள் மரண வெயிட்டிங். மாநாடு படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.