ராணுவ அதிகாரியாக நடிக்கும் சூர்யா!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
2டி எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறார். பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதை, இது. படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்க இருக்கிறது.
சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படம் சூர்யாவின் 38-வது படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விவேக் பாடல்களை எழுதுகிறார்.