டவல் போல் உடை… பிளாஸ்டிக் கவருக்குள் வித்தியாசமான போட்டோ ஷூட் ! விழுப்புணர்வு ஏற்படுத்தும் பிந்து …

டவல் போல் உடை… பிளாஸ்டிக் கவருக்குள் வித்தியாசமான போட்டோ ஷூட் ! விழுப்புணர்வு ஏற்படுத்தும் பிந்து …

 

actress bindhu madhavi awareness photo shoot

பிரபல நடிகை பிந்து மாதவி, வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் இந்த லாக் டவுன் நேரத்தில் பிளாபிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்….

 

நடிகை பிந்து மாதவி:…

 

 

தமிழ் படங்கள் :

அந்த வகையில் இதுவரை, வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 , போன்ற பல படங்களில் நடித்தார்….

சமீபத்தில் இவர் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் கழுகு 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. …

 

 

தற்போது நடித்து வரும் படங்கள்:…

இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் இவரின் கைவசம் ஒரு படம் கூட இல்லை என்றாலும்,தமிழில் ‘மாயன்’ மற்றும் ‘யாருக்கும் அஞ்சலே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்….

ஏமாற்றிய பிக்பாஸ்: …

பிந்து மாதவி, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்தார். இதில் கலந்து கொண்டு விளையாடிய அனைவர்க்கும் பட வாய்ப்புகள் கிடைத்த போதிலும் பிந்து மாதவிக்கு அவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை….

யூடியூபில் வெறித்தமாக சாதனை செய்துள்ள ஆளப்போறான் தமிழன் பாடல்.. செம மாஸ்…

யூடியூபில் வெறித்தமாக சாதனை செய்துள்ள ஆளப்போறான் தமிழன் பாடல்.. செம மாஸ்…

 

Vijay film Mersal follows Baahubali to China box office - Movies News

 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்து வெற்றியடைந்த படம் மெர்சல். இப்படத்தில் மிக பெரிய சிறப்பம்சம் ஆளப்போறான் தமிழன் பாடல் தான்.

அப்பாடல் வெளிவந்த போதே பல பல சாதனைகளை செய்து நம்மை மிரள வைத்தது.

இந்நிலையில் இப்பாடல் வெளிவந்ததில் இருந்து தற்போது வரை 120 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.

 

 

ராஷ்மிகாவின் விநோதப் பழக்கம்

ராஷ்மிகாவின் விநோதப் பழக்கம்

 

Border Collie

 

இன்ஸ்டாகிராமில் மட்டுமே ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா நேற்று சிறிது நேரம் டுவிட்டரிலும் உலாவினார். அப்போது அவரிடம் ரசிகர்கள் கேள்விக்கனைகளை தொடுத்தனர். வழக்கம் போல் தயக்கமின்றி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அவர்.

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ராஷ்மிகா, துன்பமான நேரத்தில் சிரிப்பது எனது பழக்கம். இது ஒரு தீவிரமான பிரச்சினை என்பது எனக்கு தெரியும். ஆனால் அது தான் உண்மை. எனவே எந்த ஒரு சூழ்நிலையையும் என்னால் எளிதாக சமாளித்துவிட முடியும், என்றார்.

இடுக்கண் வருங்கால் நகுக என திருவள்ளூர் கூறிய அறிவுரையை ராஷ்மிகா அப்படியே பின்பற்றுகிறார் போலும். நல்ல பழக்கம் தான் என்றாலும் இது விநோதமானது என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

ரிஸ்க்கான உடற்பயிற்சியால் காயமடைந்த அருண் விஜய்.!

ரிஸ்க்கான உடற்பயிற்சியால் காயமடைந்த அருண் விஜய்.!

 

 

ஒர்க்கவுட் மிஷனில் சாகச உடற்பயிற்சி ஒன்று செய்கையில் திடீரென அதிலிருந்து தவறி விழுந்து இரண்டு முழங்கால்களிலும் படுகாயம் அடைந்தது. இது குறித்து அவர் கூறுகையில், இதை ஒருபோதும் செய்ய வேண்டாம், ஒர்க்கவுட்டிற்கு முன்பு ஒர்க்கவுட் இயந்திரங்களை சரிப்பார்க்கவும் என்றும், கீழே விழுந்ததால் முழங்கால்கள் இரண்டு ஒரு வாரமாக வழங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார்.

அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.சமீபத்தில்வெளியான கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சாகச வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஒர்க்கவுட் மிஷனில் சாகச உடற்பயிற்சி ஒன்று செய்கையில் திடீரென அதிலிருந்து தவறி விழுந்து இரண்டு முழங்கால்களிலும் படுகாயம் அடைந்தது. இது குறித்து அவர் கூறுகையில், இதை ஒருபோதும் செய்ய வேண்டாம், ஒர்க்கவுட்டிற்கு முன்பு ஒர்க்கவுட் இயந்திரங்களை சரிப்பார்க்கவும் என்றும், கீழே விழுந்ததால் முழங்கால்கள் இரண்டு ஒரு வாரமாக வழங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும்  நல்ல வேளை வீழ்ச்சியில் தலையில் காயம் ஏற்படவில்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி என்றும், பயிற்சியாளர் இல்லாமல் ஒருபோதும் இதுபோன்ற உடற்பயிற்சியை செய்யாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.

 

 

 

 

சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்…

சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்…

 

கனடாவில் சிக்கி தவிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

சஞ்சய் எப்படி இருக்கான்? - விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்

 

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், பிலிம் மேக்கிங் படிக்க அவர் கனடாவுக்கு சென்றார். இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்ததாகவும். மகனிடம் தினமும் போனில் பேசி அவரை வெளியே செல்லாமல் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் பரவின. இதுபற்றி அறிந்த நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
சஞ்சய், விஜய்
‘சஞ்சய் எப்படி இருக்கான்? கனடாவில் நிலைமை எப்படி இருக்கிறது’ என கேட்டுள்ளார். ‘பயப்படும்படியாக எதுவும் இல்லை. சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான் ’ என்று விஜய் கூறியுள்ளார். விஜய்யும், அஜித்தும் இதுபோல் அவ்வப்போது போனில் பேசுவது வழக்கமான ஒன்றுதான் என அவர்களுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே ஒரு போன் கால்…. ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்

ஒரே ஒரு போன் கால்…. ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்…

 

ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தூத்துக்குடியில் சிக்கி தவித்த 11 பெண்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் மூலம் உதவியுள்ளார்.

 

ஒரே ஒரு போன் கால்.... ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்

 

சென்னையை சேர்ந்த தேவிகா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பெண்கள் கடந்த மார்ச் மாதம் தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் அவர்கள் அனைவரும் தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டனர். அவர்களில் தேவிகா தவிர மற்ற பெண்கள் அனைவரும் 20 வயத்துக்குட்பட்டவர்களாம்.
கையில் இருந்த பணம் சில நாட்களில் செலவான நிலையில், பின்னர் பேருந்து நிலையங்களிலும், கோவில்களிலும் தங்கியிருந்த அவர்கள், ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை சந்தித்து, அப்பெண்கள் தங்களது நிலையை எடுத்துக் கூறியுள்ளார்கள்.
விஜய்
உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிசி ஆனந்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்மூலம் இந்த விஷயம் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விஜய் உடனடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை போனில் தொடர்பு கொண்டு, அந்த 11 பெண்களையும் சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அரசிடம் முறையாக அனுமதி பெற்று, அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி

வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி

 

 

வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி

 

நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த மாதம் திருச்செந்தூரில் அளித்த பேட்டி பரபரப்பானது. அந்த பேட்டி பற்றி வடிவேலு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் திருச்செந்தூர்ல சாமி கும்பிட்டுட்டு வெளியே வரும்போது என்கிட்ட மைக்கை நீட்டி `ரஜினி அரசியலுக்கு வந்தா நான் கட்சியைப் பார்த்துப்பேன். முதலமைச்சரா வேறு ஒருத்தரை வைக்க போறேன்று சொல்றாரே’னு கேள்வியை கேட்டுப்புட்டாங்க.

அப்போ `ரஜினிசார் சொல்றது சரிதானே யாருக்கு அந்த மனசு வரும்.

பாராட்டுறேன் அவர் சொன்னதை வரவேற்குறேன்’னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு மதுரைக்கு வந்துட்டேன். திடீர்னு ஒரு நாள் போன். `என்ன வடிவேலு எப்படி இருக்கீங்க?’ன்னு ரஜினி சார் பேசுனார். `

ரொம்ப நல்லா பேசுனீங்க’னு பாராட்டுனார். அதுக்கப்புறம் ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் மனம்விட்டு பேசிட்டு இருந்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நேரடியாக டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் அனுஷ்கா படம்?

நேரடியாக டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் அனுஷ்கா படம்?

ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து அனுஷ்காவின் படமும் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேரடியாக டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் அனுஷ்கா படம்?
கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் தியேட்டருக்கு பதிலாக இணையதளத்தில் நேரடியாக புதிய படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் வருகிற 29-ந்தேதி இணையதளத்தில் ரிலீஸ் ஆகிறது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படமும் நேரடியாக இணையதளத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி வெளியாகிறது. இரண்டு பெரிய நடிகைகள் படங்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாவது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனுஷ்கா
இந்த நிலையில் நடிகை அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தையும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் இணைய தளத்தில் வெளியிட தயாராகிறார்கள். இதில் மாதவன், மைக்கேல், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது.
ஜனவரி 31-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து பின்னர் பிப்ரவரிக்கு தள்ளி வைத்தனர். அதன்பிறகு ஏப்ரல் மாதம் வரும் என்றனர். கொரோனா ஊரடங்கினால் 3-வது தடவையும் வெளியாகவில்லை. இதனால் ‘நிசப்தம்’ படத்தை இணையதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

என்ன ஆச்சரியம்: புது மாப்பிள்ளை ராணாவை யார் வாழ்த்தியிருக்கார்னு பாருங்க

என்ன ஆச்சரியம்: புது மாப்பிள்ளை ராணாவை யார் வாழ்த்தியிருக்கார்னு பாருங்க

 

மிஹீகா பஜாஜை திருமணம் செய்யப் போவதாக அறிவித்த நடிகர் ராணாவை ஸ்ரீரெட்டி வாழ்த்தியுள்ளார்.

 

rana daggubati

 

தெலுங்கு நடிகர் ஹைதராபாத்தில் இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் மிஹீகா பஜாஜை காதலித்து வருகிறார். ராணா ப்ரொபோஸ் செய்ய மிஹீகாவும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து ராணா தான் மிஹீகாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன் காதலை அனைவரும் அறியச் செய்தார்.

 

அந்த புகைப்படத்தை பார்த்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்தினார்கள். இந்நிலையில் சர்ச்சை நடிகைஸ்ரீரெட்டிராணாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பெண்ணுடன் நிம்மதியாக வாழ கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று ஸ்ரீரெட்டி ராணாவை வாழ்த்தியை பார்த்து பலரால் அவர்களின் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை.

 

samayam tamil

 

ராணாவை ஸ்ரீரெட்டி வாழ்த்தியதில் என்ன பெரிய அதிசயம் என்று நினைக்கிறீர்களா?. சென்னையில் வந்து செட்டில் ஆகும் முன்பு ஸ்ரீரெட்டி ராணாவின் தம்பி அபிராம் மீது பாலியல் புகார் தெரிவித்தார். முன்பு ஸ்ரீரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின்(ராணாவின் அப்பா) மகன் பட வாய்ப்பு தருவதாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். ஸ்டுடியோவில் வைத்து என்னுடன் உறவு கொண்டார் என்றார்.

பேட்டியில் சுரேஷ் பாபுவின் எந்த மகன் தன்னை ஏமாற்றினார் என்பதை ஸ்ரீரெட்டி கூறவில்லை. இதனால் அது ராணாவா, அபிராமா என்று பலரும் குழம்பினார்கள். பின்னர் தெலுங்கு செய்தி தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது தான் அபிராம் பெயரை சொன்னார் ஸ்ரீரெட்டி. மேலும் தானும், அபிராமும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களையும் ஸ்ரீரெட்டி வெளியிட்டார்.

 

samayam tamil

 

தம்பியை விளாசிவிட்டு அண்ணனுக்கு ஸ்ரீரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளதால் தான் பலரும் வியக்கிறார்கள். லாக்டவுன் நேரத்தில் ஆன்லைனில் ராணா மிஹீகாவிடம் ப்ரொபோஸ் செய்தார். லாக்டவுன் முடிந்த பிறகு முறையே நிச்சயதார்த்தம் நடக்குமாம்.

ராணா, மிஹீகாவின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. ராணாவின் வாழ்வில் காதல் வருவதும், போவதுமாக இருந்த நிலையில் அவர் மிஹீகாவை திருமணம் செய்யப் போவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த மிஹீகாவுக்கும், ராணாவுக்கும் பொதுவான நண்பர்கள் பலர் உள்ளனர். பல ஆண்டுகளாக இருவருக்கும் பழக்கமாம். ஆனால் அந்த பழக்கம் தற்போது தான் காதலாக மாறி திருமணம் வரை வந்துள்ளது. இந்த காதல் திருமணத்தில் முடியும் என்பது ராணா, மிஹீகா ஆகியோரின் நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஏற்கனவே தெரியுமாம்.

ராணாவுக்கு திருமணம் என்றதும் தெலுங்கு ரசிகர்களோ அடுத்து பிரபாஸுக்கு எப்பொழுது திருமணம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பிரபாஸுக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்று கூறப்படுகிறது.

பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டது என்று பேச்சு கிளம்பியது. இதை பிரபாஸ் பலமுறை மறுத்தும் யாரும் நம்பவில்லை. பிரபாஸுக்கு அவர் வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை ஒரு பெண்ணும் சரியாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாக்டவுனால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் என்று வதந்தியை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிரபாஸுக்கு திருமணம் ஆகும் வரை இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது போன்று

குரங்கணிக்குச் சென்றாரா பாரதிராஜா! அடுத்த சர்ச்சையில் இயக்குனர் இமயம்…

குரங்கணிக்குச் சென்றாரா பாரதிராஜா! அடுத்த சர்ச்சையில் இயக்குனர் இமயம்…

 

barathiraja

 

கரோனாவால் மிகவும் பெரிய வகையில் பாதிக்கப்பட்டுள்ளது சென்னை. இதனால் சென்னையிலிருந்து வெளியேறும் யாராக இருந்தாலும் சென்ற இடத்தில் தங்களைத் தானே 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் உத்தரவு.

 

இதனிடையே, தனது சகோதரியைப் பார்ப்பதற்காகச் சொந்த ஊர் தேனிக்குச் சென்ற இயக்குனர் பாரதிராஜாவைத் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி நகராட்சி உத்தரவிட்டது. பின்னர், இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவ, பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், நான் மூன்று முறை டெஸ்ட் எடுத்ததில் கரோனா நெகட்டிவ். இருந்தாலும் மக்களின் நலனுக்காக நானும் என்னுடன் வந்தவர்களும் தேனி வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், போடி அருகே முந்தல் சோதனைச் சாவடியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் புகைப்படத்தில், கரோனா தடுப்புப் பணியின் போது குரங்கணி சென்று திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று கருத்தையும் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகச் சொன்ன பாரதிராஜா சுகாதாரத்துறை அலுவலர்களின் உத்தரவை மீறி வெளியே வந்துவிட்டாரா என்றும், இந்தச் சம்பவம் குறித்து நகராட்சி சேர்ந்த அலுவலர்கள் விசாரணையும் நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.