நடிகை த்ரிஷா தேர்ந்தெடுத்த மூன்று சிறந்த நடிகர்கள் இவர்கள் தான், அதோடு தன் மிகப்பெரும் சோகத்தையும் சொன்ன திரிஷா

நடிகை த்ரிஷா தேர்ந்தெடுத்த மூன்று சிறந்த நடிகர்கள் இவர்கள் தான், அதோடு தன் மிகப்பெரும் சோகத்தையும் சொன்ன திரிஷா

 

COVID-19: South star and UNICEF brand ambassador Trisha issues ...

 

 

நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர், இந்த லாக்டவுன் நேரத்தில் தனது டிக்டாக் பக்கத்தில் பல்வேறு விதமான விடியோக்களை பதிவிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கேள்விக்கு பதிலளித்து வந்தார். மேலும் இந்தியா சினிமாவின் மூன்று சிறந்த நடிகர்கள் யாரென்றும் கூறியுள்ளார்.

1. கமல், 2. மோகன்லால், 3. அமீர் கான் என தனக்கு பிடித்த மூன்று சிறந்த நடிகர்கள் என கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூறும் படமான கார்த்திக் டயல் செய்த எண் எப்போது வெளியாகும் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த திரிஷா அந்த கூறும் படத்திற்கு இசையமைக்கும் வேலை நடந்து வருவதாகவும், விரைவில் கூறும் படம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

அதோடு தன் வாழ்வில் இதுவரை உண்மையான காதலையே சந்தித்தது இல்லை என்று கூறியுள்ளார்.

‘மாஸ்டர்’ வெளியீட்டுத் தேதிக்கு காத்திருக்கும் தமிழ்த் திரையுலகம்

‘மாஸ்டர்’ வெளியீட்டுத் தேதிக்கு காத்திருக்கும் தமிழ்த் திரையுலகம்

 

master-release-plan

 

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டுக்குத் தேதிக்காக தமிழ்த் திரையுலகினர் காத்திருக்கிறார்கள்.

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதால், ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் படத்தின் முதல் பிரதி தயாராகவில்லை.

 

இதனிடையே, கரோனா ஊரடங்கு முடிந்து எப்போது திரையரங்குகள் திறக்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. திரையரங்குகள் திறப்பது தொடர்பாக இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையுமே நடைபெறவில்லை. தற்போதுள்ள சூழல் மற்றும் படங்கள் வெளியீடு உள்ளிட்டவை தொடர்பாக சிலரிடம் விசாரித்தோம்.

விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருமே ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டுக்குத்தான் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வழக்கமான மக்கள் கூட்டம் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆகையால் ‘மாஸ்டர்’ வெளியானால் மட்டுமே மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவார்கள் எனக் கருதுகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

மேலும்,விஜய் படம் வெளியானால் முதல் நாள் வசூல் என்பது ரூ.30 கோடிக்கும் அதிகமாக இருக்கும். ‘மாஸ்டர்’ படம் வெளியாகி முதல் நாளில் இதே அளவுக்கு வசூல் செய்துவிட்டால், மக்கள் திரையரங்கிற்கு வரத் தயாராகிவிட்டார்கள் எனக் கருதி மற்ற படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகும் என நினைக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இதனால் ஒட்டுமொத்தத் திரையுலகமுமே ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டுக்குத்தான் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘மாஸ்டர்’ படக்குழுவினரோ இறுதிக்கட்டப் பணிகளை முடித்துவிட்டாலும், தீபாவளிக்கு வரலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளனர். அதற்கு முன்னதாக திரையரங்குகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வரட்டும் எனக் காத்திருக்கிறார்கள்.

‘மாஸ்டர்’ படத்தில் என்ன பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன என்று விசாரித்தபோது, “கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. அவை முடிந்தவுடன் அனைத்தையும் ஒன்றிணைந்து முதல் பிரதி எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்கள்

இளம் வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 47வயதான பிரபல தயாரிப்பாளர்.!

இளம் வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 47வயதான பிரபல தயாரிப்பாளர்.!

 

 

மகளின் வற்புறுத்தலின் காரணமாக ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில்  வைத்து 47 வயதான தில் ராஜூ தன்னை விட 20 வயது குறைந்த நடுத்தர வயது பெண்ணை நேற்றைய முன்தினம் திருமணம் செய்து கொண்டார்

 

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜூ. இவர் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார். இவர் ஃபிடா, நேனு லோக்கல், யவடு, தில், சதமானம் பவதி, ஜானு ஆகிய பல படங்களை தயாரித்துள்ளார். இவரது முதல் மனைவியான அனிதா 2017ல் மாரடைப்பு ஏற்பட்டு காலமானதை தொடர்ந்து இவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள மகள் வற்புறுத்தி வந்தார். சமீபத்தில் தான் தில் ராஜூ தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்து தற்போது அவரது மகளுக்கு ஒரு மகளும் உண்டு.

இந்த நிலையில் தற்போது தனது மகளின் வற்புறுத்தலின் காரணமாக ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில்  வைத்து 47 வயதான தில் ராஜூ தன்னை விட 20 வயது குறைந்த நடுத்தர வயது பெண்ணை நேற்றைய முன்தினம் திருமணம் செய்து கொண்டார். ஊரடங்கு காரணமாக திருமணத்தில் 20 அல்லது 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று ஆணை விடுத்துள்ளதால் இரு வீட்டாரின் உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். தற்போது பல தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் வருகின்றனர்.

புல்லிங்களா வெறும் 15 நாள் தான் ஷார்ப்பா இருங்க… “மாஸ்டர்” எடிட்டிங் ஸ்டார்ட்!

புல்லிங்களா வெறும் 15 நாள் தான் ஷார்ப்பா இருங்க… “மாஸ்டர்” எடிட்டிங் ஸ்டார்ட்!

 

 

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீறு விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.

 

இந்நிலையில் படத்தின் எடிட்டிங் பணிகள் கிடப்பில் இருந்து வந்த நிலையில் இன்று இதற்கான வேலைகளை துவங்கியுள்ளனர் படக்குழு. இந்த பணிகள் தொடர்ந்து 15 நாள் நடைபெறும் என கூறப்படும் நிலையில் அதன் பின்னரே படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ முழு தகவலை படக்குழு வெளியிடும் என நம்பப்படுகிறது.ஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்

தமன்னாவை ஆச்சரியப்படுத்திய ரசிகர்கள்

தமன்னாவை ஆச்சரியப்படுத்திய ரசிகர்கள்

 

தமன்னாவை ஆச்சரியப்படுத்திய ரசிகர்கள்

புது புது விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம் என நடிகை தமன்னா கூறியுள்ளார்.

 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, கொரோனா ஊரடங்கையொட்டி இணையதளத்தில் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்று சினிமா அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-
“எனக்கு சிறுவயதில் இருந்தே புது புது விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம். இப்போது ஊரடங்கில் புதிதாக நிறைய கற்று வருகிறேன். எனது அம்மாவிடம் இருந்து நமது பண்பாடு கலாசார முறைகளை தெரிந்து கொள்கிறேன். எனது தாய்மொழி சிந்தி, ஆனால் எனக்கு அந்த மொழி தெரியாது. தெலுங்கு, தமிழ் மொழிகளை புதிதாக கற்று நன்றாக பேசுவேன். இப்போது கொரோனா ஊரடங்கில் எனது அம்மாவிடம் சிந்தி கற்றுக்கொண்டு வருகிறேன். இந்த ஆண்டு முடிவதற்குள் தாய்மொழியில் நன்றாக பேசிவிட லட்சியம் வைத்துள்ளேன். அதோடு சமையலிலும் எனது அம்மாவிடம் நிறைய கற்று வருகிறேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் வாழ்க்கையில் சினிமா முக்கிய அங்கமாக இருக்கிறது. திரைப்படங்களை கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே அவர்கள் பார்க்கின்றனர். இது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. தமிழில் விஜய், அஜித்குமாருடன் நடித்து விட்டேன். இருவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்கள் இப்போதைய தலைமுறையினரை மட்டுமன்றி அடுத்த தலைமுறையினரையும் சந்தோஷப்படுத்தும் நடிகர்களாக இருக்கிறார்கள்”.

மூன்று மடங்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறிய OTT.. அப்படியே கிளம்ப சொன்ன தளபதி விஜய்

மூன்று மடங்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறிய OTT.. அப்படியே கிளம்ப சொன்ன தளபதி விஜய்

Income Tax Department recovers Rs 65 crore from Tamil actor ...

 

ஓவர் தி டாப் மீடியா சர்வீஸ் (ஓ.டி.டி) கண்டு மிரண்டு போய் உள்ளது தமிழ் சினிமா. அதற்கு பல காரணங்கள் உண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஓ.டி.டி-யில் ஒளிபரப்பப்பட்டால் தமிழ் சினிமா அழிந்துவிடும் என்பதுதான்.

தற்போது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓ.டி.டி-யில் வெளியிடப்போவதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தநிலையில் வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

இப்படி ஹிட் கொடுக்கக்கூடிய படங்கள் ஓ.டி.டி பிளாட்பார்மில் வெளியிட்டால் நாளை தியேட்டர்களை இழுத்து மூடும் அபாயம் ஏற்படும், தொழிலாளர்கள் வேலை இழப்பு, சினிமா துறையில் இருக்கும் ஊழியர்கள் வேலை இழப்பு, நடிகர்களின் சம்பளம் கோடிகளில் பெற முடியாது இது போன்ற பல பிரச்சனைகள் உள்ளன.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தை மூன்று மடங்கு அதிகமாக லாபம் தருவதாக கூறி பேரம் பேசப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் வேண்டாம் என்று கூறியதற்கு பல காரணங்கள் உள்ளது.

முக்கியமான ஒரு சில காரணங்களை தற்போது பார்க்கலாம்; முதல் காரணமாக பார்த்தால் ரசிகர்கள் பால் அபிஷேகம் பண்றது, அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என்பதுதான், முக்கியமான இரண்டாவது காரணம் வினியோகஸ்தர்களிடமிருந்து தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சில கோடிகளை வங்கியுள்ளனர்.

இதனால் அவர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை நொறுங்கிவிடும், மூன்றாவது இதுபோன்று ஓ.டி.டி-யில் வெளியிட்டால் நாளை அரசியலுக்கு வரும் நடிகர்கள் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். இப்படி சினிமா துறையினர் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகின்றன.

இப்போது ஓ.டி.டி நிறுவனங்கள் எதற்கு இதனை முன்னிறுத்தி முயற்சி செய்கிறது என்பதை பார்க்கலாம், அதாவது தற்போது உள்ள சூழ்நிலையை கையில் எடுத்துக்கொண்டு ஓ.டி.டி நிறுவனங்கள் தயாரிப்பைவிட மூன்று மடங்கு பணம் கொடுப்பதாக மாஸ்டர் படத்திற்கு கேட்டார்களாம். ஒரு தடவை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்து விட்டாலே அனைத்தும் முடிந்துவிட்டது.
ஏனென்றால் அடுத்தடுத்து இருக்கும் தல அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா போன்றவர்களின் படமும் இதே நிலை ஏற்படும் என்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் தளபதி விஜய்யை டார்கெட் செய்துள்ளது.
தியேட்டரில் ரிலீஸ் பண்ணால் மூன்று மடங்கு லாபம் வருமா என்பது கேள்விக்குறிதான் ஆனாலும் இவர்கள் இவ்வளவு முயற்சி செய்வதற்கு தமிழ் சினிமாவை அழிப்பதற்கான அடித்தளம் தான் என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது.
மாஸ்டர் படத்தைப் பொருத்தவரை தயாரிப்பாளர் மற்றும் தளபதி விஜய் எந்த ஒரு சூழ்நிலையிலும் திரைப்படம் ஓ.டி.டி பிளாட்பார்மில் வராது தியேட்டரில் மட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக மட்டும் வெளியிடுகிறோம் என்று கூறிவிட்டனர்.

இதனால் தமிழ் சினிமா காப்பாற்ற பட்டுள்ளதாகவும், தளபதியின் அரசியல் கனவு காப்பாற்ற பட்டதாகவும் சினிமா துறையினர் இணையதளத்தில் விவாதப் பொருளாக எடுத்துள்ளனர். எது எப்படியோ தளபதி படம் தியேட்டரில் பார்த்தால் மட்டுமே மரண மாஸ் ஆக இருக்கும்.

நடுரோட்டில் நடனமாடிய ஸ்ரேயா… கடுப்பான ரசிகர்கள்!!

நடுரோட்டில் நடனமாடிய ஸ்ரேயா… கடுப்பான ரசிகர்கள்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ள நிலையில், கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறு தொழில்கள் முதல் சினிமாத் துறை வரை அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

 

நடுரோட்டில் நடனமாடிய ஸ்ரேயா… அறிவுரை சொன்ன ரசிகர்கள்!!

 

இஷ்டம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்து உள்ளார்.

ஸ்ரேயா ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதனால் பார்சிலோனாவில் கணவருடன் வசித்து வருகிறார்.

 

.

சமீபத்தில் நடிகை ஸ்ரேயா சரண் தன் கணவர் வீட்டில் பாத்திரம் கழுவும் வீடியோவினை வெளியிட்டு மற்றவர்களுக்கு சவால்விட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து, மேஜிக் செய்யும் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டு இருந்தார். இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றன.

தற்போது அவர்  நடுரோட்டில் மழையில் நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிடம் ரசிகர்களோ ஏன் இப்படி கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் இருக்கிறீர்கள்? என்று கடுமையாக எச்சரித்து உள்ளனர்.

விஜய் சேதுபதி மீது கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார்

விஜய் சேதுபதி மீது கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார்

 

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி மீது கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

 

விஜய் சேதுபதி மீது கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார்

 

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் மீது திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

 

புகார்

 

அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ‘‘நடிகர் விஜய்சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கோவில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்துக்களின் மனதை புண்படுத்தியிருக்கும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

தாயின் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவிய விஷால்

தாயின் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவிய விஷால்

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தன் அம்மாவின் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

 

தாயின் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவிய விஷால்

 

கொரோனா பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள், சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அதேபோல், நடிகர் விஷால் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.

 

நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் காட்சி

 

இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் செய்து வருகிறார். விஷாலின் மக்கள் நல மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

விஷால் தத்து எடுத்த தஞ்சாவூர் மாவட்டம் கார்கவயல் கிராம மக்கள் அனைவருக்கும் வழங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் படத்தில் சில காட்சிகளைப் படமாக்கிய அஜித்

விஸ்வாசம் படத்தில் சில காட்சிகளைப் படமாக்கிய அஜித்

 

ajith1xx

 

அஜித் – சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் – விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை – இமான், ஒளிப்பதிவு – வெற்றி.

இந்தப் படம் கடந்த வருடம் ஜனவரி 10-ம் தேதி வெளியானது. அமேசான் பிரைமில் பிப்ரவரி 25 அன்று வெளியானது. இந்நிலையில் இப்படம் பற்றி தெரியாத ஒரு தகவலை அமேசான் பிரைம் தெரிவித்துள்ளது. படத்தில் டைட்டில் கார்டு இடம்பெறும்போது அதில் பயன்படுத்தப்பட்ட சில டிரோன் காட்சிகளை அஜித்தே படமாக்கியதாக அமேசான் பிரைம் தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர்களின் பெயர்கள் வரும்போது இடம்பெற்ற காட்சியை அஜித் படமாக்கியதாகவும் தெரிவித்துள்ளது. அஜித், டிரோனை இயக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. சிறுவயதிலிருந்தே ஏரோ மாடலிங்கில் விருப்பம் உள்ளவர் நடிகர் அஜித். கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்து, சிறிய ரக விமானங்களை இயக்குவதிலும், சோதனை செய்வதிலும் ஆர்வம் உள்ளவர்.

இதன்மூலமாகவே படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இவர் தனது பொழுதைக் கழித்தார் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் தொழில் நுட்பக் கல்லூரியான மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) நிர்வாகம் அழைத்தபோது விருப்பத்துடன் அதை ஏற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற மிகவும் புகழ்பெற்ற “மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ எனும் போட்டியில் எம்.ஐ.டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் அஜித், டீம் தக்‌ஷா குழுவினரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அப்போட்டியின் இறுதிச் சுற்றில் தக்‌ஷா குழுவினர் 2-ம் இடம் பிடித்தார்கள். இந்தப் போட்டியில் 100 நாடுகள் பங்கு கொண்டன.